Monday, July 22, 2013

ஐ.பி.பி.எஸ்.,சின் பொது எழுத்துத் தேர்வு அறிவிப்பு                                                                   
Click Hereஆன்-லைன் பதிவு செய்ய இறுதி நாள் : 12.08.2013

இந்தியாவில் உள்ள 21 பொதுத் துறை வங்கிகள் இந்த அமைப்பு நடத்தும் பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண்கள் அடிப்படையில் காலி இடங்களை நிரப்பி வருகின்றன. இந்த அமைப்பின் சார்பாக புரொபேஷனரி அதிகாரிகள் மற்றும் நிர்வாகப் பயிற்சியாளர்கள் பதவிக்கான பொது எழுத்துத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேவைகள்: ஐ.பி.பி.எஸ்., அமைப்பு நடத்தும் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2013 அடிப்படையில் 20 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
இந்தப் பதவிகளுக்குவிண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண் தேர்ச்சியுடன் பட்டப் படிப்பும், கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் பொதுவான தேவைகளாக வரையறுக்கப்படுகிறது.
 
விண்ணப்பிக்க கட்டணம்  ஐ.பி.பி.எஸ்., அமைப்பின் புரொபேஷனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவிக்கான பொது எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ. 600/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை கோர் வங்கிச் செயல்பாடுடைய வங்கிகளின் மூலம் செலுத்தலாம்.
கட்டணத்தை ஆன்-லைன் மற்றும் ஆப்-லைன் என்ற இரண்டு முறைகளிலும் செலுத்த முடியும். முதலில் இணையதளத்திற்கு சென்று நமது விண்ணப்பங்களைப் பதிவு செய்துவிட்டு கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, கோவை, கடலூர், சேலம், வேலூர், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்-லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 19.10.2013/20.10.2013/26.10.2013/27.10.2013
இணையதள முகவரி: www,ibps.in/career_pdf/CWE_PO_MT_III_Advt_08_07_2013.pdf

Click Here

0 comments:

Post a Comment

Design by NewWpThemes | Blogger Theme by Lasantha - Premium Blogger Templates | Modified - படுகை.காம்